Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை

டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்: போலீசார் அதிரடி நடவடிக்கை
, செவ்வாய், 31 மார்ச் 2020 (09:05 IST)
டாஸ்மாக் கடை சுவரில் ஓட்டை போட்டு திருடிய கும்பல்
தற்போது ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமலில் இருப்பதை அடுத்து அனைத்து மதுபான கடைகளும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. தமிழகத்திலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்
 
ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு மர்ம கும்பல் திருடி சென்று விட்டது என்பதும் இதுகுறித்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருத்துறைப்பூண்டியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சுவரில் ஓட்டை போட்டு ரூபாய் 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம கும்பல் ஒன்று திருடி உள்ளதாக  போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது 
 
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவான வீடியோக்களை வைத்து விசாரணை செய்ததில் டாஸ்மாக் கடையில் திருடிய மூவரை கண்டுபிடித்து அந்த மூன்று பேரையும் கைது செய்தனர். அவர்கள் 45 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை ரூ.11,500 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருப்பதால் டாஸ்மாக் கடைகளில் திருடும் கும்பல் அதிகரித்து வருவதன் காரணமாக டாஸ்மாக் கடையில் உள்ள சரக்குகளை உடனடியாக பாதுகாப்பான குடோனுக்கு மாற்ற வேண்டும் என டாஸ்மாக் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா வைரஸ்: ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இத்தாலி நிலவரம்!