கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை விஷம் வைத்து கொன்ற கொடூர மனைவி!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் தம்பதி ஈஸ்வரன் - கலைமணி(19) இவர்களுக்கு கல்யாணம் ஆகி 3 வருஷமாச்சு. ஒன்றரை வயசில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. திடீரென போன மாதம் 8-ம் தேதி ஈஸ்வரன் இறந்துவிட்டார். இதனை அறிந்த ஈஸ்வரன் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் கதறி அழுதார்கள்.
ஆனால் அவர்களுக்கு மேல் அழுதார் கலைமணி. நீலி வேஷம் போட்டார். "இப்படி குடிச்சி குடிச்சியே என்னையும், பிள்ளையும் தனியா விட்டுட்டு போய்ட்டாரே" என்று கூப்பாடு போட்டார். கலைமணி சொந்தக்காரர்கள் எல்லாரிடமும் சென்று இதையே சொல்லி சொல்லி அழுதார்.
ஆனால், இந்த சோகம் 10 நாளைக்கு கூட தாக்கு பிடிக்கவில்லை, பிறகு திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு போய் மாமனாரிடம் ஒப்படைத்தார். அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை எல்லாத்தையும் எடுத்துகொண்டு ஓட்டம் பிடித்தார் கலைமணி.
குழந்தையை ஏன் ஒப்படைத்தார், நகை, பணத்தை எடுத்து கொண்டு மாயமாகி விட்டாலே என ஒன்றும் புரியாமல் திகைத்தார் மாமனார் . இதனால் மாமனாருக்கு சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது. பிறகு ஒருநாள் அழகர்சாமி என்ற இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்துவிட்டார். ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த மாமனார், நேராக ராயப்பன்பட்டி போலீசுக்கு போய் விட்டார்.
கணவனை இழந்த சோகம் கூட முடியாத நிலையில் இப்படி ஜாலியாக மருமகள் ஊர் சுற்றி வருவதால், தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் உடலை தோண்டி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் சொன்னார். இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டது.
பிறகு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டதில் உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது. இதையடுத்து கலைமணியிடம் விசாரணையை ஆரம்பிக்கும்போதே எல்லா உண்மையையும் பயத்தில் கொட்டி விட்டார்.
"எனக்கு அழகர்சாமியை ரொம்ப பிடிச்சு போச்சு. அதனால் ரெண்டு பேருக்கும் கள்ள உறவு இருந்தது. எவ்வளவோ ஜாக்கிரதையாக நாங்கள் இருந்தும், என் புருஷன் இதை கண்டுபிடிச்சுட்டார். எப்பவுமே எங்கள் உறவுக்கு தொந்தரவாகவே இருந்தார். அதனால்தான் அவர் சாப்பிடும்போது அந்த சாப்பாட்டில் விஷம் கலந்து தந்துட்டேன்" என்றார். இதையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலர்கள் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்கள்.