இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் கார்டில் தமிழில் இருந்த வாக்கியங்கள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அனைத்து விதமான பயணங்கள், பரிவர்த்தனைகள், வங்கி கணக்குகள் என அனைத்திலும் ஆதார் அடையாள அட்டை முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் ஆதார் அட்டை விண்ணப்பித்து பெறுகையில் அட்டையின் கீழ் “எனது ஆதார் எனது அடையாளம்” என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் சமீபத்தில் வழங்கப்படும் ஆதார் அட்டைகளில் அந்த வாசகம் நீக்கப்பட்டு விட்டதாகவும், அந்த பகுதியில் இந்தி வாசகங்களே இடம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொழில்நுட்ப கோளாறா அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.