தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன. டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டு வகை கொரோனாவும் பரவுவதால் மூன்றாம் அலை பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள், 18 மாணவியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.