சென்னையை சேர்ந்த தொழிலதிபரிடம் பல லட்சக் கணக்கில் மோசடி செய்த சின்னத்திரை நடிகை அனிஷா கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருபவவர் அனிஷா. இவரும், இவரின் கணவர் சக்திமுருகனும் சேர்ந்து ஸ்கை எக்விப்மெண்ட்ஸ் எனும் மின்சாதன கடை ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் கே.கே.நகரில் வசிக்கும் பிரசாந்த் என்ற தொழிலதிபர் நடத்தி வரும் மின்சாதன விற்பனை கடைக்கு வந்த சக்தி முருகன், தாங்கள் புதிதாக தொடங்கவுள்ள ஹோட்டலுக்கு 104 குளிர் சாதன பெட்டிகள் வேண்டும் எனக்கூறி ரூ.37 லட்சத்துக்காண காசோலையை கொடுத்துள்ளார்.
விலை மதிப்பான காரில் வந்த சக்தி முருகனை தொழிலதிபர் என நம்பி, 104 ஏ.சிகளை பிரசாந்த் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இது பற்றி சக்திமுருகனிடம் பிரசாந்த் கேட்டதற்கு, தருகிறேன் என காலம் தாழ்த்தியுள்ளார். ஆனால், அந்த ஏசிகளை சக்திமுருகன் ஆன்லைனில் விற்பனை செய்தது பிரசாந்துக்கு தெரியவந்தது. இதனையடுத்து, இதுபற்றி கேட்க, அனிஷாவும், சக்திமுருகனும் பணத்தை தர முடியாது எனக்கூறியதோடு அவரை மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, கே.கே. நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் புகார் அளித்தார். எனவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் அனிஷாவை கைது செய்துள்ளனர். அதோடு, தலைமறைவாகவுள்ள சக்தி முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
விலை மதிப்பான கார்களை வைத்திருப்பவர்களை தொடர்பு கொண்டு உங்கள் கார்களை வாடகைக்கு கொடுத்தால், அதிக பணம் தருகிறேன் எனக்கூறி அந்த காரை சக்தி முருகன் பயன்படுத்தியதும், அதில் சில காரை அவர் விற்றுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.