Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!

நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை! சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு..!
, வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:29 IST)
கமல்ஹாசன் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகை ஜெயப்பிரதா நடத்தி வந்த திரையரங்கில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் அவர் செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது. 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்ட நிலையில் நடிகை ஜெயப்பிரதாவுக்கு  ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 
 
நடிகை ஜெயபிரதா எம் பி ஆக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 பேரை கொடூரமாக கடித்த குதிரை சில நிமிடத்தில் ரத்தம் கக்கி பலி: கடலூரில் அதிர்ச்சி சம்பவம்..!