நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் முன் ஜாமீன் பெற முயற்சித்து வருவதாகவும் கைது நடவடிக்கையை தடுக்க அவர் சட்டரீதியில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னால் இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை எழும்பூர் காவல் நிலையம் உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கஸ்தூரி இடம் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்த எழும்பூர் போலீசார் அவருக்கு சம்மன் அளிக்க வந்த போது அவர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் சம்மனை அவரது வீட்டு சுவற்றில் ஒட்டி விட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாகவும் அவர் முன்ஜாமீன் எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.