சரக்கு பட இசை வெளியீட்டு விழாவில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கூல் சுரேஷ் பற்றி பிரபல சினிமா விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80, 90 களில் பிரபல வில்லனாக வலம் வந்தனர் மன்சூர் அலிகான்.
இவர், “சரக்கு” என்ற படத்தை உருவாக்கியுள்ளார் மன்சூர் அலிகான். ஜெயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகி பாபு, பாக்கியராஜ், கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கூல் சுரேஷும் கலந்து கொண்டார்.
இந்த விழா மேடையில் பேசிய அவர் திடீரென கையில் வைத்திருந்த மாலையை அங்கு நின்று கொண்டிருந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பெண் மீது போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு பெண்ணின் அனுமதி இன்றி மாலை போட்டது தவறு என்று கூல் சுரேஷை மன்சூர் அலிகான் கண்டித்தார்.
இந்த சம்பவம் பற்றி பிரபல சினிமா விமர்சகர் வலைபேச்சு அந்தனன் தன் சமூகவலைதள பக்கத்தில்,
நேற்று நடந்த மன்சூரலிகானின் சரக்கு பட விழாவில் கூல் சுரேஷ் நடந்து கொண்டது அநாகரீகத்தின் உச்சம். திடீரென ஒரு மாலையை எடுத்து தொகுப்பாளினியான ஐஸ்வர்யாவின் கழுத்தில் அணிவிக்க, பதறிப்போனார் அவர். அதற்கப்புறம் பத்திரிகையாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டார் கூல் சுரேஷ். பரபரப்புக்காக ஏதாவது செய்யும் இவரைப்போன்ற அறிவிலிகளை எப்படி இந்த சினிமா மேடைகள் பொறுத்துக் கொள்கின்றன?
அடச்சீ என்று தெரிவித்துள்ளார்.