Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!

கூடுதல் தளர்வுகள் - தமிழ்நாட்டை இயல்பு நிலைக்கு திருப்பி விட்ட ஸ்டாலின்!
, திங்கள், 28 ஜூன் 2021 (08:32 IST)
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார். 

 
ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்கள் என மொத்தம் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கியுள்ளது. மேலும், வழிபாட்டுத்தலங்களும் திறக்கப்பட்டுள்ளது. இது போதாதென்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்  வணிக வளாகங்களை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
அதோடு, 23 மாவட்டங்களில் துணிக்கடைகள், நகைக்கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏசி இல்லாமல் காலை 9 முதல் இரவு 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
27 மாவட்டங்களில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு தேவையில்லை. இம்மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள், தொல்லியல் சின்னங்கள், அகழ் வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை திறந்திருக்கும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

27 மாவட்டங்களில் கட்டுபாடுகளுடன் பேருந்து சேவை துவக்கம்!