Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு எதிரொலி: எழும்பூரில் மீண்டும் ஆதித்தனார் சிலை

Advertiesment
aadhithanar statue
, புதன், 20 செப்டம்பர் 2017 (05:33 IST)
சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் ஆதித்தனார் சிலை கடந்த 30 வருடங்களாக இருந்த நிலையில் சமீபத்தில் இந்த சிலை அகற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்த சிலை அமைந்திருந்த இடத்தில் சிக்னல் அமைக்கும் பணிக்காவும் சிலையைச் சுற்றி புல் வெளி போன்ற அமைப்பு ஏற்படுத்தவே அகற்றப்பட்டதாகவும், மீண்டும் பணிகள் முடிந்ததும் அதே இடத்தில் சிலை வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.



 
 
இந்த நிலையில் சொன்னது போலவே நேற்று மீண்டும் ஆதித்தனார் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இதற்கு தமிழக அரசுக்கு ஆதித்தனார் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர். 
 
இந்த நிலையில் வரும் 27ஆம் தேதி ஆதித்தனார் பிறந்தநாள் வரவுள்ளதை அடுத்து அன்றைய தினம் சிறப்பாக பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணுறுப்பில் சிக்கிய கணவரின் தலை: ஆபாச இணையதளம் பரப்பிய வதந்தி