Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக கூட்டணி சேர தயங்கும் சின்ன கட்சிகள்.. என்ன காரணம்?

அதிமுக கூட்டணி சேர தயங்கும் சின்ன கட்சிகள்.. என்ன காரணம்?

Mahendran

, புதன், 17 ஜனவரி 2024 (10:09 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, திமுக தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே இருந்த கட்சிகள் அந்த கூட்டணியில் தொடரும் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக கூட்டணியிலிருந்து கட்சிகள் தான் தற்போது முடிவெடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்ட நிலையில் இது பாராளுமன்றத்திற்கான தேர்தல் என்பதால்  பாஜக இல்லாத அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு சின்ன கட்சிகள் தயங்கி வருகின்றன.

குறிப்பாக பாமக,  தேமுதிக, புதிய  தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இணைந்தால் தேர்தலின் வெற்றி பெற்றால் குறைந்த பட்சம் ஒரு இணைய அமைச்சர் பதவி கிடைக்கும் என கனவில் உள்ளனர்.

 ஆனால் அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்றால் எம்பி என்ற பதவியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காது என்ற கணக்கு போடுவதாக தெரிகிறது. எனவே பாஜக தலைமையில் ஒரு பிரம்மாண்டமான கூட்டணி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு கார் பரிசு தருவதால் என்ன பயன்? – இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை!