விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக அரசை ஆண்மையுள்ள அரசு என்று கூறியதன் மூலம் தமிழக அரசை அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இது குறித்த விமர்சனங்கள் பின்வருமாறு:
எச்.ராஜா: கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு.
ராஜ்சத்யன் அதிமுக: நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை, சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்
கோவை சத்யன் அதிமுக: ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்.
சிடிஆர் நிர்மல்குமார் பாஜக: முந்தானைக்கு பின்னால் ஒளிந்து 30 வருடங்களாக தலை நிமிராமல் இருந்த ஆண்மை ... டெல்லியில் பாரதத்தின் தலைமகனை சந்தித்தபின் தலைநிமிர்ந்த ஆண்மையை நினைத்து பெருமை கொள்ளுங்கள்...