தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது
தேர்தல் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது
மாநகராட்சி வார்டு பதவிக்கு போட்டியிட கட்டணம் ரூ. 5000 என்றும், நகராட்சி வார்டு பதவிக்கு 2,500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட கட்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.