மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளாம் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என அதிமுக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதிமுக தரப்பில் இந்த செய்திகள் மறுக்கப்பட்ட நிலையில் மாநகர மேயர் பதவிகளுக்கு மக்கள் வாக்களிக்கும் முறையை மாற்றி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை கொண்டுவர தமிழக அரசு அமைச்சரவையில் அவசர சட்டம் இயற்றியுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு பெற்றுக்கொண்டுவர்கள் தங்களின் பாத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.