Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 + 1 தொகுதிகள் காலி? இடியும் அதிமுக கோட்டை; எடப்பாடிக்கு சோதனை காலம் போல...

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (18:39 IST)
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு அடுத்தடுத்து சிக்கல் வந்துக்கொண்டேதான் இருக்கிறது. இன்றுதான் இடைத்தேர்தல் ரத்து என்ற செய்தி வந்து அதனை நினைத்து பெருமூச்சு விடுவதற்கு பாலகிருஷ்ணன் தீர்ப்பு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 
 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மீது எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.  
 
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கற்களை வீசி சேதப்படுத்தியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின மீதான் தீர்ப்பு வெளியானது. அதில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
3 ஆண்டுகள் தண்டனை என்பதால் அவரது அமைச்சர் பதவியும் ஓசூர் எம்எல்ஏ பொறுப்பும் பறிபோகும். ஆனால், தற்போதைக்கு இந்த தீர்ப்பு நி்றுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ண ரெட்டியும் இந்த தீர்ப்பு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துவிட்டு வந்தார். 
 
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்த அந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், திருவாரூர் மற்றும் திருபரங்குன்றம் இடைத்தேர்தலும் பெண்டிங்கில் உள்ளது. திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வந்த போது வேட்பாளரையே அறிவிக்காம் காலம் தாழ்த்தி கடைசியில் இடைத்தேர்தலே வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை இல்லை என ஆகிவிட்டது. 
 
ஒரு தொகுதிக்கே வேட்பாளரை முடிவு செய்ய அதிமுக இப்படி பாடுபட்டால், 20 தொகுதி இப்போ இதோடு பாலகிருஷ்ணனின் ஓசூர் தொகுதி என மொத்தம் 21 ஆக ஆகும் போது அதை எப்படி அதிமுக அரசு சமாளிக்க போகுதோ தெரியல....

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments