Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு எண்ணாமலே... நேரடி மோதலில் திமுக முக்குடைத்து அதிமுக வெற்றிமுகம்!!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (13:16 IST)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 40,547 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி உறுதி செய்துள்ளார். 
 
தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் புதுச்சேரியில் காமராஜ் நகர் என்ற தொகுதியிலும் கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.   
 
இதில் வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்தில் புதுவை காமராஜ் தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆம், காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14782 வாக்குகளை பெற்று 7171 வாக்குகள் வித்தியாசத்தில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை தோற்கடுத்து வெற்றி பெற்றுள்ளார்.   

 
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணப்பட்டு வந்த நிலையில், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 40,547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், வாக்கு எண்ணிக்கையின் 18 வது சுற்றில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1.03,697 வாக்குகள் வாக்குகள். திமுக வேட்பாளர் புழழேந்தி 63,150 வாக்குகள் வாக்குகள். இன்னும் 20,000 வாக்குகள் எண்ண வேண்டியுள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் 40,547 வாக்குகள் முன்னிலையில் உள்ளதால் அவர் வெற்றி பெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். 
 
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக - திமுக கட்சிகள் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை களமிறக்காமல் நேரடியாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments