Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி அகற்றம் - காரையே உதறிய சசிகலா !!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (10:33 IST)
தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக்கொண்டிருக்கிறார்.  
 
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்நிலையில், தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில், காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவகாசம் வழங்கப்படும், சசிகலா இதை செய்ய தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தெரிவித்திருந்தது. 
 
அதன்படி, தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலா வேறு காருக்கு மாறி,  அதாவது கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரிலும் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா. மேலும், அங்கிருந்து சென்னையை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments