Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேமுதிகவை இழக்க அதிமுக முடிவு – கூட்டணி குறித்து அமைச்சர் சூசகப்பதில் !

Advertiesment
ஜெயக்குமார்
, திங்கள், 25 பிப்ரவரி 2019 (12:45 IST)
பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ள்தாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தேமுதிக கூட்டணி குறித்து சர்ச்சையானக் கருத்துகளை அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் முதலில் இடம்பிடித்த பாமக 7 சீட்டுகளைப் பெற்றது. அதனையடுத்து தங்களை விடப் பலம் குறைந்த கட்சியாக இருக்கும் பாமகவிற்கே 7 சீட்டுகள் என்றால் அதைவிடக் கம்மியானத் தொகுதிகளை நாங்கள் பெறமாட்டோம் என தேமுதிக சார்பில் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டது.

ஆனால் ஏற்கனவே பாமகவுக்கு 7 பாஜகவுக்கு 5 என வாரி வழங்கிவிட்ட அதிமுக இப்போது தேமுதிக கேட்கும் தொகுதிகளைக் கொடுக்கத் தயக்கம் காட்டி வருகிறது. இப்போழுது கையில் 37 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள அதிமுக பாதிக்கு மேல் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டால் சொந்தக் கட்சி வேட்பாளர்களை எப்படி சமாளிப்பது என்ற யோசனையில் உள்ளது. அதனால் அதிமுக தேமுதிக கூட்டணி இறுதியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஜெயக்குமார்

இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுக தேமுதிக வைத் தன் பக்கம் இழுக்க நினைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்போது தேமுதிக விற்கு அதிகளவில் பேரம் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் தேமுதிக யார் முதலில் தாங்கள் கேட்கும் சீட்களோடு பேச்சுவார்த்தைக்கு வருகிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்ற முடிவில் இருக்கிறது.

இதையடுத்து திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டுக் கட்சிகளும் தேமுதிக வை விடவும் முடியாமல் அவர்கள் கேட்கும் தொகுதிகளைக் கொடுக்கவும் முடியாமல் குழம்பி வருகின்றனர். இதனையடுத்து இப்போது அதிமுக சார்பில் தேமுதிக கூட்டணி குறித்த முடிவு என்ன என்பதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அதில் ’தேமுதிக வோடுக் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம். வரவில்லையென்றால் வருத்தம் இல்லை ‘ எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயக்குமாரின் இந்த பதிலால் அதிமுக தேமுதிகவை விட்டுக்கொடுக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளிகளில் காலை உணவு திட்டம் ...மாணவர்கள் மகிழ்ச்சி...