காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த 18 தொகுதிகளோடு காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதியை சேர்த்து 20 தொகுதிகளுக்கும் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி பொறுப்பாளர்களை நியமித்தனர்.
இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறது அதிமுக. இருக்கிறது.
இந்நிலையில் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலிவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.