அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் தேனி சென்ற டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கடந்த சில காலமாக மோதல் நிலவி வரும் நிலையில் கடந்த மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், ஈபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.
இப்படியாக ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தேனியில் நடந்த அமமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரக்ள் சையதுகான் உள்ளிட்ட பலர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வரவேற்பு அளித்துள்ளனர். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.