Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது அறிவும் இல்லை, பொதுவான அறிவும் இல்லை: முக ஸ்டாலினை விமர்சிக்கும் அதிமுக நாளேடு!

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (07:13 IST)
அதிமுக நாளேடு திமுக தலைவரை விமர்சனம் செய்வதும், திமுக நாளேடு முதல்வரை விமர்சனம் செய்வதும் நாள்தோறும் நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில், இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை அதிமுக நாளேடு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது 
 
பால் விலை உயர்வுக்கு முக ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிப்பது போன்ற ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை இன்று வெளிவந்துள்ளது. ஒருபுறம் பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது, மறுபுறம் பால் விலையை உயர்த்தக் கூடாது என்று கூறியிருப்பது, இவை இரண்டும் உணர்த்துவது ஒன்றே தான். முக ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் ஞானம் மட்டுமல்ல, பொதுவான புரிதல் என்பது கடுகளவும் இல்லை என்பதைத்தான் உணர்த்துகிறது 
 
ஏற்கனவே எடப்பாடியார் பதவி விலக வேண்டும் என்கிற ஒரே வரியை மூன்று ஆண்டுகளாக கூறி வந்தவர், அதற்கான காரணங்கள் அத்தனையும் இப்போது தீர்வுகளை எட்டிவிட்ட நிலையில், புதிதாக இந்த அரசு மீது புகார் சொல்வதற்கு வாய்ப்பு கிட்டாத நிலையில், இப்போது உறக்கத்திலிருந்து எழுந்தவர் போல உளற தொடங்கி விட்டார் என்று அந்த நாளேடு விமர்சனம் செய்துள்ளது 
 
நாளுக்கு நாள் ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளத்தில் நிறையாசனமிட்டு எடப்பாடியார் பெருமைகளை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அரசை எதிர்ப்பதற்கு ஒரு பரிதாபத்துக்குரிய எதிர்க்கட்சி தலைவருக்கு இப்போது காரணங்களும் கிடைக்கவில்லை என்றால் உண்மையாகவே பொது அறிவும், பொதுவான அறிவும் இல்லாத தலைவராக திமுக தலைவர் இருப்பதை நினைத்து கவலைப்பட தோன்றுகிறது என்றும் அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது
 
இந்த கட்டுரைக்கு திமுக விரைவில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments