Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – அதிமுக ஆதரவு !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (09:22 IST)
மோடி அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாக அதிமுக சட்ட அமைச்சர் சி வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

மோடி அறிவித்துள்ள ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ பற்றி கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று நடந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.. இதில் கலந்துகொள்வதற்காக அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம் டெல்லி சென்றார். ஆனால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் அதிமுக சார்பால ஓ பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிசாமிதான் கலந்து கொள்ள முடியும். இதனால்  சி வி சண்முகத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் தங்கள் கட்சியின் கருத்துகளை கடிதம் வாயிலாக அளித்துவிட்டு தமிழகம் திரும்பினார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிவி சண்முகம், ‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் பற்றி மத்திய அரசுக்கு எழுத்துப் பூர்வமாக அறிக்கை அளித்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments