Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால் 3 ஆண்டுகள் சிறை!? – சென்னை மாநகராட்சி அதிரடி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (12:28 IST)
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மரங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றாவிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இயற்கையை பாதுகாக்கும் வகையில் சாலைகளின் ஓரங்களில் அரசாங்கம் மரங்களை நட்டு வளர்த்து வருகிறது. ஆனால் வளர்ந்த மரங்களில் சில தனியார் நிறுவனங்கள், சிறுதொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை விளம்பரம் செய்ய விளம்பர பலகைகளை ஆணி அடித்து மாட்டுவது, கம்பி வைத்து கட்டுவது போன்ற செயல்களின் மூலம் சேதப்படுத்தி வருகின்றன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை மாநகர ஆணையர் ”மரங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர பலகைகளை சம்பந்தபட்ட நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். அப்படி செய்ய தவறினால் 25 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

மேலும் கேபிள் ஒயர்கள், கயிறுகள், அலங்கார விளக்குகள் போன்றவற்றை மரங்களில் கட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுற்றுசூழலை பாதுகாக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments