புதுவையில் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாளை புதுவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் ஆட்சி அமைப்பது உறுதி என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை அடுத்து திமுக எம்எல்ஏ ஒருவரும் சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி என்ற தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சற்று முன் தனது பதவியை ராஜினாமா செய்து, ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் திமுக கூட்டணி 12 குறைந்துள்ளதால் நாளை பெரும்பான்மையை முதல்வர் நாராயணசாமி நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்