பொதுவாக தீபாவளிக்கு முந்தைய நாள் வரை ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதும் என்பது தெரிந்ததே. ஆனால் ஈரோடு நகரில் மட்டும் தீபாவளிக்கு மறுநாளும் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அதற்கு காரணம் ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் தீபாவளிக்கு மறுநாள் பாதி விலை என்ற சலுகை உட்பட சலுகை விலையில் ஏராளமான ஜவுளிகளை விற்பனை செய்வார்கள்.
தீபாவளிக்கு வாங்கிய ஜவுளிகளில் விற்பனை செய்யாமல் மீதம் இருக்கும் ஜவுளிகளை தள்ளுபடி வெளியில் விற்பனை செய்வதால் தீபாவளிக்கு மறுநாளும் ஈரோடு நகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் மட்டும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் இன்று காலையில் சலுகை அறிவிக்கப்பட்ட ஜவுளிக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக ஆர்கேவி சாலையில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் ஈரோடு நகரில் 10க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளில் சலுகை விலையில் ஜவுளிகள் விற்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது