Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (15:47 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தை அடுத்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் மீண்டும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


 

 
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த அறவழி போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இதைத்தொடர்ந்து இனி மெரீனாவில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
போராட்டத்தின் இறுதி நாளில் கலவரத்தில் ஈடுப்பட்டதாக 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் மெரீனாவில் கூடி போராட்டம் நடத்தப் போவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.
 
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பிற்பகல் முதல் மெரீனாவில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments