தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தினகரனின் அமமுக கட்சியில் இணைந்துள்ள சம்பபம் பெரும் பரபரப்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
.
இன்று, அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ நீலகண்டன் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுவில் இணைந்தார்.
இதுகுறித்து நீலகண்டன் கூறியதாவது : ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், அமமுகவுடன் சில முக்கிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. அவர் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார். இத்தொகுதியில் ஐம்முனைப் போட்டி நிலவுகிறது