சேலம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலத்தில் உள்ள விமான நிலையத்தில் பல உள்நாட்டு விமானங்களின் சேவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது சேலம் விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
அதற்கு பிறகு 3 ஆண்டுகளாக சேலம் விமான நிலையத்தில் விமான சேவைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் முதல் மீண்டும் சேலத்தில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.