அமலாக்கத்துறை மு.க.அழகிரியின் மகன் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி திமுக தலைவராக இருந்த போது முக அழகிரி கட்சியின் கோட்பாடுகளை மீறியதற்காக அக்கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டார். கலைஞரின் மரணத்திற்குப் பிறகும் ஸ்டாலின் முக அழகிரியை ஏற்றுக்கொள்ளவில்லை.
அழகிரி அவ்வப்போது ஸ்டாலினை விமர்சித்து பேசுவார். அதேபோல் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் திமுகவையும் ஸ்டாலினையும் விமர்சித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் மதுரை கீழவளவில் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் தயாநிதிக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.