Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதிக்காத ஸ்டாலின்: ரஜினியுடன் அரசியல் களத்தில் அழகிரி?

Advertiesment
அழகிரி
, வியாழன், 14 நவம்பர் 2019 (17:00 IST)
முக அழகிரி ரஜினியுடன் இணைந்து தமிழக அரசியலில் இறங்குவார் என எதிர்ப்பார்த்து அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். 

 
கருணாநிதி மறைவின் போது, திமுகவில் இணைவதற்காக பல விஷயங்களை செய்தார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் இதை எதையும் கண்டுக்கொள்ளவில்லை.  அதன்பின்னர் திருப்பரங்குன்றம் தொகுதியில் அவர் போட்டியிடுவார் தனது அரசியல் ஆதிக்கத்தை காண்பிப்பார் என்று எல்லாம் பேசப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
 
அதன் பின்னர் அழகிரி குறித்து பெரிதாக எதுவும் பேசப்படவில்லை. இந்நிலையில் அவர் சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சந்தித்ததால் மீண்டும் அவரது பெயர் ஊடங்களில் அடிப்பட துவங்கியுள்ளது. திமுக குறித்து பேச மறுத்த அழகிரி தற்போது ரஜினியை பற்றி பேசியுள்ளார். 
அழகிரி
ரஜினி கூறியது போல் தமிழகத்தில் தலைமை தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்றும் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் துவக்கம் முதலே நட்பு பாராட்டி வரும் அழகிரி நிச்சயம் அவரது கட்சியில் இணைவார் என்ற பேச்சு இருந்துவந்தது. 
 
தற்போது அழகிரியின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார் என்ற பேச்சு அவர் ரஜினியுடன் அரசியலில் களம் காணுவார் என்பதை உறுதுபடுத்தும் வகையில் உள்ளது. அழகிரியின் அரசியல் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஆவரது ஆதரவாளர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒசாமா பின்லேடன்தான் எங்கள் ஹீரோ! – முஷ்ரப் பேசிய வீடியோ!