Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்: முக ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (07:38 IST)
தமிழக அரசு கொரோனா வைரசுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய வரும் 15ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கூட்ட இருப்பதாக அறிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென தமிழக அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் தனியாக மக்களுக்கு உணவு உள்பட எந்தவித உதவியும் செய்யக் கூடாது என்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தே இந்த உதவியை செய்ய வேண்டும் என்றும் அறிவித்து இருந்தது
 
இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் உள்பட பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது ஜனநாயக நாடு என்றும் மக்களுக்கு உதவி செய்ய கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் திமுக தலைவர் நேற்று கூறியிருந்தார்
 
இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஏப்ரல் 15ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், இந்த் அனைத்து கட்சிக் கூட்டம் நடக்குமா என்பது கேள்விக்குறியே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு சர்ச்சை.! சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அவசர மனு..!!

மருத்துவக் கழிவுகள் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது.? சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள் - ராமதாஸ்..!

தேசிய அளவில் சனாதன தர்ம ரக்‌ஷணா வாரியம்: அமைச்சர் பவன்கல்யாண் அறிவிப்பு..!

விமானம் கிளம்பியபோது திடீரென கதவை திறக்க முயன்ற பயணி: சென்னையில் பரபரப்பு..!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு செல்வப்பெருந்தகை காரணமா? ராகுல் காந்திக்கு கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments