Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (14:08 IST)
ஆறுமுக ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்  உண்மைக்குப் புறம்பானவை என்று முன்னாள் அமைச்சர் சி. விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலிதா மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 

ALSO READ: ''ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்'' - ஆறுமுக சாமி அறிக்கையில் தகவல்
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆணைய குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்று முன்னாள்  சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆறுமுக ஆணைய அறிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்  உண்மைக்குப் புறம்பானவை,. ஒரு அமைச்சராக நாம் என் கடமையைச் செய்த நிலையில், அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது. மடியில் கனமில்லை, வழியில்லை பயமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments