Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இடையே புகைச்சல்?

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:42 IST)
கடந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டன. இதையடுத்து, அதிமுக தலைவர்களை  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து,  கண்டனம் தெரிவித்ததுடன், அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என்று அறிவித்தார்.

இதையடுத்து, சிவி.சண்முகம், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லி சென்று, அமைச்சர் அமித்ஷாவிடம் அண்ணாமலை பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில்,வரும் பாராளுமன்றத் தேர்தலில்  அதிமுக- பாஜக இடையே கூட்டணி தொடர்பாக இன்னும் உறுதியாக நிலைப்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில்,  பாஜகவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை தலைப்புச் செய்தியாக அச்சிட்டதால் நமது அம்மா நாளிதழின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜக கூட்டணியைவிட்டு வெளியேற விரும்பாத முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments