Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயுடன் கூட்டணி? மநீம தலைவர் கமல்ஹாசன் கூறிய பதில்

vijay -kamal

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (13:39 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள  நிலையில், நாளை இக்கட்சியின்  7வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட உள்ளது.
 
எனவே  எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான  முக்கிய அறிவிப்பை கமல்ஹாசன் இன்று வெளியிட வாய்ப்புள்ளதாகக்  கூறப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்த கமல்ஹாசன்,
 
''விவசாயிகளுக்குத் தமிழ் நாடு செய்ததில் 10 சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. நாட்டை படையெடுக்கும் எதிரி படைகள் போல டெல்லியில் விவசாயிகள் வரவேற்கப்படுகிறார்கள். விவசாயிகள் நடக்கும் பாதையில் ஆணிப்படுகை போட்டுள்ளார்காள். அதே நேரத்தில் தமிழ் நாட்டில் விவசாயிகளை மதிக்கிறோம் ''என்று தெரிவித்தார்.
 
இதையடுத்து, நீங்கள் முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலதித்த அவர், முழு நேர அரசியலுக்கு வருவது பற்றி என்னை  நோக்கிக் கேட்கிறீர்களே... நீங்கள் முழு குடிமகனாகக் கூட இருப்பதில்லை. 40 சதவீதம் பேர் வாக்கு செலுத்தக் கூட வராமல்   வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் கிடையாது என்று  கூறினார்.
 
மேலும், விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், சினிமாவைவிட்டு முழு  நேர அரசியலில் இறங்குவது அவர் விருப்பம்.அவர் செய்யும் சினிமா அவர் பாணி, நான் செய்யும் சினிமா என் பாணி. அவரவர்களுக்குப் பிடித்த விஸயத்தைச் செய்து கொண்டிருக்கிறோம். விஜய் அரசியலுக்கு நுழைந்ததும் முதல் வரவேற்பு என்னுடையதாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைநிலை ஆசிரியர்கள் கைதுக்கு கண்டனம்..! திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.! டிடிவி தினகரன்..!