மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் கிடையாது என கல்லூரி நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் கல்லூரிகளில் அடையாள அட்டை பெற்று அதன் பின்னரே பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி அடையாள அட்டையை காட்டி சலுகை கட்டண அட்டை பெற்று அதன் பின்னரே பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய வேண்டும் என்று அறிவித்து உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது