புகை பிடித்தல் மது அருந்துதல் போன்ற காட்சிகளில் நடிக்கும் விஜய், விஷால் போன்ற நடிகர்களுக்கு சமூக அக்கறை இல்லையா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பாமக நிறுவனர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஏனென்றால் அதில் விஜய் புகைபிடிப்பது போல் காட்சி இருந்தது.
நடிகர்கள் மக்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள் அதை விட்டுவிட்டு புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்தீர்கள் ஏனென்றால் ரசிகர்களுக்கு அது ஒரு தவறான எடுத்துக்காட்டாக இருக்கும். ஆகவே நடிகர்கள் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கக்கூடாது என தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் விஷாலின் அயோக்யா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதில் விஷால் தனது கையில் பீர் பாட்டிலுடன் நிற்கின்றார்.
இதுகுறித்து பேசிய ராமதாஸ், விஷாலின் அயோக்யா படத்தின் போஸ்டரை திரும்ப பெற வேண்டும். விஷாலுக்கு என்ன ஒரு சமூக அக்கறை? ஒரு நடிகர் சங்க பொதுச்செயலராக இருந்துகொண்டு இந்த மாதிரி மட்டமான செயல்களில் ஈடுபடலாமா? இவர்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.