Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: பாமக எம்பி அன்புமணி கவலை

anbumani
, வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:26 IST)
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பாமக எம்பி அன்புமணி கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2021-ஆம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை விட 39.80% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 
@NCRBHQ  தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது. குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடக் கூடாது!
 
ஓராண்டில் குழந்தைகளுக்கு எதிரான 6,064 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 4465 போக்சோ வழக்குகள். 69 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 99.25% பெண் குழந்தைகள்!
 
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த புள்ளி விவரங்கள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கடந்த காலங்களில் பா.ம.க. எழுப்பிய புகார்களை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன!
 
பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக வாழும் சூழலை உருவாக்குவது தான் ஒரு மாநில அரசின் முதன்மைப் பணியாகும். அந்தக் கடமையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!(
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செருப்புக்கு சமமில்லை என கூறுவதா? அண்ணாமலை ஜோதிமணி எம்பி கண்டனம்!