Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் – அடிக்கல் நாட்டு விழாவில் அன்புமனி உருக்கம் !

காடுவெட்டி குருவுக்கு மணிமண்டபம் – அடிக்கல் நாட்டு விழாவில் அன்புமனி உருக்கம் !
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:24 IST)
மறைந்த முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுபெட்டி குருவின் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸும் இளைஞர் அணி தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டனர்.

நுரையீரல் திசுப்பை நோய்க் காரணாமாக  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த மே மாதம் 26ஆம் தேதி காலமானார். குரு மறைந்த அடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அவரது குடும்பத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை, தனது அத்தை மகன் மனோஜை கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்தில் கலந்துகொண்ட குருவின் மகன் கனலரசன் மற்றும் குருவின் சகோதரிகள், பாமக தலைமை மீது கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதனால் பாமக வில் விரிசல் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.

குருவுக்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (டிசம்பர் 13 ) நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸும் இளைஞர் அணி தலைவர் அன்புமணியும் கலந்து கொண்டனர்.விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் குருவின் மறைவு குறித்தும் அவரது குடும்பத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது:-
webdunia

‘எத்தனை கோடி செலவு செய்தாலும், குருவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. குருவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம், அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. நானும் பாஸ்போர்ட் வாங்கச் சொல்லி பல முறை கூறிவிட்டேன். பல முயற்சிகளுக்குப் பிறகு ஒருவழியாக பாஸ்போர்ட் வாங்கியாயிற்று. அப்போது அழைத்தேன், ஆனால் அவர் பொங்கல் முடியட்டும் தீபாவளி முடியட்டும் என்று கூறி காலம்தாழ்த்தினார். இது அனைவருக்கும் தெரியும்

குருவுக்கு வந்த நோய்க்கு உறுப்பு மாற்ற சிகிச்சை செய்யாமல் குணப்படுத்த முடியாது. இதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டோம், ஆனாலும் தனக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏனெனில் அவரின் கூட இருந்தவர்கள் அவரைக் குழப்பி விட்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, சென்னைக்கு அருகிலேயே அப்பார்ட்மெண்ட் எடுத்து தங்கவைக்கிறேன். அவர் வெளியில் வர வேண்டாம், உயிருடன் இருக்கிறார் என்ற சந்தோஷம் நமக்கு இருக்கும் என்று கூறினேன். ஆனால் உடனிருப்பவர்கள் அவரது மனதை மாற்றிவிட்டனர்.”
webdunia

’குருவின் மகள் விருதாம்பிகையின்  திருமணத்தை இந்த சமுதாயமே கொண்டாடியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பது கோபமாக இல்லை, வருத்தமாக இருக்கிறது. குருவின் மகன் கனலரசன் ஒரு குழந்தை, அவனுக்கு ஒன்றும் தெரியாது. பிற்காலத்தில் தெரிந்துகொண்டு எங்களிடம் வருவான். அவன் மருத்துவராக வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோரின் ஆசை. ஆனால் அவன் படிப்பது போல தெரியவில்லை.’ என வருத்தமாகப் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்து வரும் காவிமயம்: இந்திய மேப்பில் மாற்றம்