சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்திலான கால்நடை ஆராய்ச்சி பூங்கா, மருத்துவ கல்லூரி ஆகியவை அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவ கால்நடை மருத்துவ கல்லூரி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அங்கு, விவசாய பெருவிழா, கண்காட்சி, கருத்தரங்கு அகியவற்றை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதலமைச்சர் கூறியதாவது :
தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களால் மாநிலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கால்நடைகள் வளர்ப்பில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என தெரிவித்தார்.
மேலும், கால்நடைகளுக்கு தரமான தீவனத்தை அளிக்கும் வகையில் கால்நடை தீவன ஆலைகள் திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.