சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேறு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வரும் நிலையில் அந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத வேறு கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பால் தாங்கள் மிகவும் பாதிப்படைந்ததாகவும் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் இந்த உத்தரவை திரும்ப பெறப்போவதில்லை என்று கூறியுள்ளது .