அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்த திட்டமிட்ட நிலையில் கல்லூரிகளுக்கு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாததால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த பல்கலைகழகங்கள் தயாரகி வருகின்றன.
இந்நிலையில் ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைகழகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அண்ணா பல்கலைகழகத்தில் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வாய்வழி தேர்வாக நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் மாணவர்களை கல்லூரிகளுக்கு வர சொல்லக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.