வங்க கடலில் சமீபத்தில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் வரும் 26 ஆம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
இதன் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியுள்ளதால் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருப்பதால் மாவட்ட நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.