முருகக்கடவுளின் ஆறுபடை வீடுகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இரண்டாம் உலகப்போர் காலத்தில் நிறுத்தப்பட்ட பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாளை தீபம் ஏற்ற அனுமதி வழங்கியதை எதிர்த்து, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் சந்திரசேகர், மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.