முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30ஆம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் அவர் ஜாமீன் பெற்று வெளியே வர முடியவில்லை.
இந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 30ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று மீண்டும் வாதங்களை முன்வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் காசோலை செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தரப்பிலிருந்து நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.