Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையப்பர் கோயிலில் ரூ.2000 நோட்டுக்கள் உள்ளதா?

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (15:37 IST)
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 2000 ரூபாய் நோட்டுகள்  உள்ளதா என்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  கடந்த 2016 ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை  ஒழிக்கும் நடவடிக்கையாக,  பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் புதிய 500 ரூபாய் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களிடம் 2000 ரூபாய் நோட்டு வழக்கத்தில் இல்லாத நிலையில் சமீபத்தில், திடீரென 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து  அல்லது பேங்கில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.

இந்த நிலையில், மக்கள் தங்களிடம்  உள்ள 2 ஆயிரம் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லையப்பர் கோயில் உண்டியலில் 2000 ரூபாய் நோட்டுகள்  உள்ளதா என்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறநிலையத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரூ.2000 நோட்டுகள் இருந்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்ய கயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசுப் பேருந்துகளில் பயணித்தால் இருசக்கர வாகனம், LED TV பரிசு! - போக்குவரத்துக் கழகம் கலக்கல் அறிவிப்பு!

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்..!

கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.100 கோடியில் பூங்கா: தமிழக சுற்றுலா துறை தகவல்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை எச்சரிக்கை..!

2 பேர் உயிருடன் எரித்து கொலை.. 9 பேர் மாயம்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments