Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அநீதியே 28 ஆண்டுகள் போதாதா ? – ஒரு தாயின் கண்ணீர்ப் போராட்டம் …

அநீதியே 28 ஆண்டுகள் போதாதா ? – ஒரு தாயின் கண்ணீர்ப் போராட்டம் …
, திங்கள், 21 ஜனவரி 2019 (10:11 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலைக்காக பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோவையில் மக்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார்.

பேரறிவாளனை ராஜீவ் காந்தி கொலைக்காக விசாரிக்க வேண்டும் எனக் காவல்துறையினர் அழைத்துச் சென்ற போது 17. இப்போது அவர் சிறையில் 28 ஆண்டுகளைக் கழித்து விட்டார். அவர்களுக்கான தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு விட்டது.

அவர்கள் 28 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்ட மசோதா இப்போது ஆளுநர் மாளிகையில் உள்ளது. இதுவரை அதுகுறித்து ஆளுநர் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார்.

தனது மகன் பேரறிவாளனின் விடுதலைக்காக அற்புதம் அம்மாள் 28 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். ஆளுநர் முதல் முதல்வர் வரை அனைவரையும் சந்தித்து மனு அளித்து உள்ளார். ஆனால் அவரது போராட்டத்துற்கு இதுவரை எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
webdunia

அதனால் இதுநாள் வரைத் தனது மகனின் விடுதலைக்காக தன்னோடு கூட நின்ற மக்களை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்க இருக்கிறார். இதற்காக மாநிலம் முழுவதும் வரிசையாக மக்களை சந்திக்க இருக்கிறார். இந்த தொடர் நிக்ழ்வின் முதல் நிகழ்வாகக் கோவையில் முதல் சந்திப்பு நிகழ இருக்கிறது.

இந்த சந்திப்புக்கு அற்புதம் அம்மாளும், 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே இயக்கமும் அழைப்பு விடுத்துள்ளது. கோவையில் உள்ள அண்ணாமலை அரங்கத்தில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் அழகான நாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!!