Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கு விசாரணை கான்பரன்சில் புகுந்த அரியர் பாய்ஸ்! – வார்னிங் கொடுத்த நீதிபதிகள்!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (12:17 IST)
தமிழகத்தில் கல்லூரி அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பது தொடர்பான வழக்கின் வீடியோ கான்பரன்சில் அரியர் மாணவர்கள் பலர் புகுந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க தடை விதித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் நடைபெறும் பயனாளர் எண், கடவுசொல் இரண்டும் அரியர் மாணவர்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் பரவியுள்ளது. இதனால் நீதிபதிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தியபோது சுமார் 300க்கும் மேற்பட்ட அரியர் மாணவர்கள் வீடியோ கான்பரன்சில் வந்ததால் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நிறுத்தினர். வீடியோ கான்பரன்ஸில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments