Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - அரசே நடத்துகிறது

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (17:32 IST)
ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு. 

 
தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
 
இதனிடையே ஜல்லிக்கட்டு குழு அமைப்பதில் உடன்பாடு ஏற்படாததால் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு செய்துள்ளது. ஆம், அரசிடம் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க தகுதியுள்ள காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள்: 
ஜல்லிக்கட்டு நடக்கும் மைதானத்திற்குள் பார்வையாளர்களாக 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
 
பார்வையாளராக பங்கேற்கும் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்.
 
மைதானங்களில் காளைகளை அடக்க சுழற்சி முறையில் மொத்தம் 300 வீரர்களுக்குள் அனுமதிக்கப்படலாம். மாடுபிடி வீரர்களும் தடுப்பூசி செலுத்தியிருத்தல் அவசியம்.
 
ஜல்லிக்கட்டில் இடம்பெறும் காளைகளை நிர்வகிக்க மாட்டின் உரிமையாளருடன், உதவியாளராக மற்றொரு நபர் அனுமதிக்கப்படுவார். இருவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம்.
 
மேலும் போட்டி நடைபெறுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற வேண்டும்.
 
இதுதவிர மாடுபிடி மைதானத்தில் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments