கோவை மாவட்டத்தில், உலக இருதய தினத்தை முன்னிட்டு நவ இந்தியா அருகில் உலக இருதய தினம்.விழிப்புணர்வுபேரணி நடந்தது.
கோவை, உலக இருதய தினத்தை முன்னிட்டு நவ இந்தியா அருகில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கிவைத்தார்.
இருதய நலமருத்துவர் சிவபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உணவு முறையில் ஏற்படும் மாற்றம்மற்றும்புகைபிடிப்பது, புகையிலை உண்பது போன்ற தீய பழக்க வழக்கங்களால், உடல் உறுப்புகள் பாதிக்கும் போது, அது இருதயத்தையும் பாதிக்கிறது.போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்து 40 நிமிடமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று கூறினார்.