Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தா, ஆயுர்வேதா மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் எப்போது? முக்கிய அறிவிப்பு..!

Mahendran
சனி, 3 ஆகஸ்ட் 2024 (13:11 IST)
சித்தா மற்றும் ஆயுர்வேத படிப்புக்கு விண்ணப்பம் எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
 
2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, சுயநிதி மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்துக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த விண்ணப்பத்தை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும்   நாளை முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
விண்ணப்பங்கள் தேர்வு குழு அலுவலகத்தில் நேரில் வழங்கப்படாது என்றும் அடிப்படை தகுதியை தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை ஆகியவற்றை https://www.tnhealth.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments